கதாநாயகனாகும் தீனா


தனுஷ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் டிவி ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் கவனம்பெற்ற தீனா கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
சின்னத்திரையிலிருந்து தற்போது அதிகமான கதாநாயகர்கள், கதாநாயகிகள் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர்களாகவே உள்ளனர். சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ப்ரியா பவானி சங்கர், மா.கா.பா ஆனந்த் என நீளும் இந்தப் பட்டியலில் தற்போது தீனாவும் இணைந்துள்ளார். தனுஷ் இயக்கி நடித்த ப.பாண்டி படத்தில் தனுஷின் நண்பனாக நடித்த தீனா, தற்போது அவரது வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
மலையாளத்தில் 2016ஆம் வெளியான படம் ‘கட்டப்பனையிலே ரித்திக் ரோஷன்’. காமெடி - டிராமா ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படத்தை நாதிர்ஷா இயக்கினார். விஷ்ணு உன்னி கிருஷ்ணன் நடித்திருந்தார். கேரளாவில் நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் தீனா கதாநாயகனாக நடிக்கிறார்.