மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

நேரில் ஆஜராக முடியாது!

நேரில் ஆஜராக முடியாது!

மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக முடியாது என்று வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸுக்குச் சசிகலா பதில் அனுப்பியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் சசிகலா உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து 189 இடங்களில் 1,500 வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது கிட்டத்தட்ட ஐந்து நாள்கள் வரை தொடர்ந்து நீடித்தது. இதுதொடர்பாக கடந்த நவம்பர் 17ஆம் தேதி போயஸ் கார்டனிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சசிகலாவின் அறைகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. வருமானவரித் துறை சோதனை தொடர்பாக விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணப்பிரியா, ஷகிலா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

போயஸ் கார்டனில் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, வருமானவரித் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

இதையடுத்து வருமானவரித் துறைக்குச் சிறையிலிருந்து சசிகலா எழுதியுள்ள பதில் கடிதத்தில், “கடந்த சில நாள்களாக மவுன விரதம் இருந்து வருகிறேன். எனவே என்னால் விசாரணைக்கு என்னால் ஆஜராக முடியாது. பிப்ரவரி 10ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறும் விசாரணையில் கலந்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 24 ஜன 2018