மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பைச் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

டி.டி.வி. தினகரனை ஆதரித்த 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் கடந்த செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தகுதி நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், ஜனவரி 22ஆம் தேதிக்குள் எழுத்துபூர்வமான வாதத்தைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று (ஜனவரி 23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. சபாநாயகர், முதல்வர், கட்சி கொறடா மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் எழுத்துபூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு ஒத்திவைத்துள்ளது.

வழக்கின் பின்னணி

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்றும் அன்றைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து கொறடா ராஜேந்திரனின் தகுதி நீக்க பரிந்துரையின் பேரில், சபாநாயகர் தனபால் 19 எம்.எல்.ஏக்களுக்கும் ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018