மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

நான் பார்க்கணும்னே, பக்கத்து வீட்டுக்காரன் குடும்பத்தோட இன்னிக்கு கவர்மென்ட் பஸ்ல போறான்... பணக்காரத் திமிர்!

*

மாமனார்: ஹலோ மாப்ள... பொண்ணும் நீங்களும் ஊருக்கு எந்த வண்டில வரீங்க?

மாப்பிள்ளை: கார்ல வர்றோம் மாமா.

மாமனார்: வேண்டாம் மாப்ள. பக்கத்து வீட்டுக்காரன் கேவலமா நினைப்பான். எவ்ளோ செலவானாலும் பரவால்ல. நீங்க டவுன் பஸ்லயே வந்துருங்க. அப்பதான் கெத்தா இருக்கும்.

*

என்ன மச்சான், புது பைக் வாங்கிட்ட போல, அப்ப இனிமே பஸ்ல வர மாட்ட...

நீ வேற... பஸ்ல போற அளவுக்கு வசதி இருந்தா, நா ஏன் பைக் வாங்க போறேன்?

*

மாப்பிள்ளை வசதியான இடம்னு எப்படி சொல்றீங்க?

பொண்ணு பார்க்க குடும்பத்தோட கவர்மென்ட் பஸ்ல வந்தாருங்கன்னா பார்த்துக்கங்களேன்.

*

எங்கப் பொண்ணுக்கும் உங்க பையனைப் பிடிச்சுப் போச்சு, வரதட்சணையா என்ன எதிர்பாக்குறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா ஒரு நல்ல நாள் பார்த்து தட்டை மாத்திக்கலாம்...

நாங்க காரு பைக்குன்னு உங்கள சிரமப்படுத்த விரும்பலங்க... என் பையன் டெய்லி பஸ்லதான் ஆபீஸ் போறான். அதுக்கான டிக்கட் காசை மட்டும் குடுத்துட்டீங்கன்னா போதும். நாளைக்கே கூட நாம தட்டை மாத்திக்கலாம்.

காரு பைக்குன்னு கேட்டிருந்தாகூட ஏதாவது முயற்சி பண்ணிருக்கலாம். ஆனா, டெய்லி பஸ்ஸுக்குக் காசு குடுக்கிற அளவுக்கு என்கிட்ட வசதி இல்லங்க.

நீங்க வேற இடம் பாத்துக்கங்க...

*

படுத்துறானுங்கய்யா படுத்துறாங்க.

இந்த பஸ் கட்டணத்தை ஏத்துனதுதான் ஏத்துனாங்க... பழங்காலத்து ஜோக்கெல்லாம் கெளறி அந்த ஃபார்மெட்லயே எழுதுறாங்க.

குபீர்ன்னு சிரிப்பு வர மாதிரியே எழுதுறது. ஆனா, அதே மெசேஜை 40 தடவை படிச்சா கடுப்பாகுமா, இல்லையா?

அதுபோல வந்த மெசேஜ்ல ஸ்மைலி, இமோஜில்லாம் சேர்த்து மறுபடி புது மெசேஜ் போல அனுப்பறது. படுத்துறானுங்கய்யா.

சட்டுபுட்டுன்னு சீக்கிரம் பிரேக்கிங் நியூஸ் எதுனா போடுங்க. அந்த மியூசிக்கைக் கேட்டே ரொம்ப நாளாச்சு. குடிகாரன் கை கால் போல... மன்னிக்கனும் குடிகாரரு கைகால் போல நடுங்குது.

ஓடாத பஸ்ஸ வெச்சு கொஞ்ச நாள் ஓட்டினோம் (ஸ்ட்ரைக்). இப்ப ஓடிக்கிட்டு இருக்கற பஸ்ல டிக்கெட்ட எடுத்து, மெட்ரோ டிரெயினுக்கும், ஜிஎஸ்டிக்கும் ஆதாரம் காட்டுன மாதிரி, போட்டோ போட்டுக்கிட்டு இருக்கோம். அடுத்த கடமையை ஆத்தனுமா இல்லையா.

மசமசன்னு நிக்காம அடுத்த விஷயத்தைக் கெளப்பி விடுங்கப்பு.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 24 ஜன 2018