மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

நடிகைகளைத் திருமணம் செய்ய தயங்குகிறார்கள்!

நடிகைகளைத் திருமணம் செய்ய தயங்குகிறார்கள்!

‘சமூகத்தில் நடிகைகளுக்கு மரியாதை உள்ள நிலையிலும் நடிகைகளைத் திருமணம் செய்துகொள்ளத் தயங்குவது வேதனை அளிப்பதாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார் நடிகை நமீதா.

தமிழில் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஏய், அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நமீதா. இதைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் குறையவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின், தன் காதலரான நடிகர் வீரா என்பவரைக் கடந்த நவம்பர் 24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

நடிகை நமீதா ஐதராபாத்தில் நேற்று (ஜனவரி 23) செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “ஒருவர் கணவராகவும், குழந்தைக்குச் சிறந்த தந்தையாகவும் இருப்பார் என்ற உணர்வு ஏற்பட்டால் அவரைத் திருமணம் செய்துகொள்ளலாம். நடிகர் வீராவைப் பார்த்தபோது எனக்கு அப்படித்தான் ஏற்பட்டது. ஒளிவுமறைவு இல்லாமல் பேசினார். எனது ஆத்மாவும் அவரது ஆத்மாவும் இணைந்த மாதிரி இருந்தது. காதலையும் நிலா வெளிச்சத்தில் மெழுகுவத்தி ஏற்றிவைத்து என்னிடம் அழகாக வெளிப்படுத்தினார். அதன் பிறகு நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். எனது பெற்றோர், ‘வீரா நல்லவர், உனக்கு நம்பிக்கை இருந்தால் தாராளமாகத் திருமணம் செய்துகொள்’ என்றனர். உறவினர்கள் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடந்தது. கதாநாயகிகளை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். பெருமையாகவும் பேசுகிறார்கள். சமூகத்தில் மரியாதையும் உள்ளது. ஆனால், நடிகைகளைத் திருமணம் செய்துகொள்ளத் தயங்குகிறார்கள். இது வேதனை அளிப்பதாக உள்ளது. செய்யும் தொழிலை வைத்து யாரையும் முடிவு செய்யக் கூடாது. தவறான முடிவுக்கு வந்துவிடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதன் 24 ஜன 2018