மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

ஜிஎஸ்டி: உயர் நீதிமன்றங்களுக்குத் தடை!

ஜிஎஸ்டி: உயர் நீதிமன்றங்களுக்குத் தடை!

சானிட்டரி நேப்கின்களுக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்குகளை, உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நேப்கின்களுக்கு 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நேப்கின்களுக்கு 12 சதவிகித வரி விதிப்பை எதிர்த்துப் பெண்கள் அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவி ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சானிட்டரி நேப்கின்கள் ஆடம்பரப் பொருள் அல்ல. பெண்களுக்கு அத்தியாவசியமான அடிப்படைப் பொருள். அதை விளையாட்டு பொம்மைகள், தோல் பொருள்கள், மொபைல்போன், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுடன் சேர்த்து 12 சதவிகித வரி விதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, நேப்கின்கள், கருத்தடை சாதனங்கள், குங்குமம், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி வளையல்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக் கூடாது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், "நேப்கின்களுக்கான வரி விதிப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும். அந்த வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க வேண்டும். மேலும், முந்தைய மறைமுக வரி விதிப்பில் நேப்கின்களுக்கு 13.7 சதவிகித வரி இருந்தது. அது ஜிஎஸ்டி மூலம் 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது” என்று மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018