மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

மன்னர் வகையறா மகுடம் சூடுமா?

மன்னர் வகையறா மகுடம் சூடுமா?

இராமானுஜம்

பரபரப்பான திரைக்கதையில்கூட நகைச்சுவை உணர்வுடன் படங்களை இயக்குபவர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி காமெடி தொகுப்பில் எப்போதும் தவிர்க்க முடியாதது. இவர் இயக்கத்தில் விமல் - ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வருகிற ஜனவரி 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அது நடைபெறாததற்குக் காரணம் உண்டு.

பசங்க படத்தின் மூலம் விமல் கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இவருக்கென தனித்து தமிழ் சினிமாவில் வியாபாரம் இல்லை. இயக்குநர், தயாரிப்பு நிறுவனங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு விமல் நடித்த படங்கள் வியாபாரம் ஆனது. பூபதி பாண்டியன் கூறிய பட்ஜெட் விமல் படத்தின் வியாபாரத்தில் சாத்தியமில்லை என்று எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் கூறியதால், விமல் சொந்தமாக மன்னர் வகையறா படத்தை தயாரித்துள்ளார்.

பொங்கல் அன்று வர திட்டமிட்ட இந்தப் படம் வியாபாரம் ஆகாததால், ஜனவரி 26 ரிலீஸ் ஆகிறது. நடிகர் விமல் திரையுலக வாழ்க்கையில் சம்பாதித்த மொத்த வருமானமும் மன்னர் வகையறாவில் சுமார் 10 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்துடன் அனுஷ்கா நடித்துள்ள பாகமதி, உதயநிதி நடித்துள்ள நிமிர் படங்களும் ரிலீஸ் ஆவதால் போட்டி ஏற்பட்டுள்ளது. இவ்விரு படங்களையும் கடந்து மன்னர் வகையறா கல்லா கட்ட வேண்டும். விநியோக அடிப்படையில் இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. இதனால் மொத்த ரிலீஸும் விமல் சார்ந்தது. படம் வெற்றி பெற்று கல்லா கட்டினால்தான் விமல் மன்னராக முடியும்.

இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படத்துடன் போட்டி போட்டு ஜெயிக்க முடியுமா என பூபதி பாண்டியனிடம் கேட்டபோது “மன்னர் வகையறா படம் தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை பகுதி கலாசார பின்னணியைக் கதைக்களமாகக்கொண்டு உருவாகியுள்ளது. மூன்று குடும்பங்களுக்குள் இருக்கும் வீரம், பாசம் இவற்றை முன்னிலைப்படுத்தி படம் உருவாகியுள்ளது. சண்டையோ, அடிதடியோ அது எதுவானாலும் குடும்பத்தினர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அனைத்தையும் பாசிட்டிவாகவே இதில் அணுகியிருக்கிறேன். அதனால் இந்தப் படம் வெற்றிபெறும்” என்கிறார் இயக்குநர்.

விமல் திரையுலகப் பயணத்தை தீர்மானிக்க இருக்கிறது இந்தியக் குடியரசு தினமான ஜனவரி 26.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

புதன் 24 ஜன 2018