பூச்சிக்கொல்லிகளை நீக்க புதிய மருந்து!


பூச்சிக்கொல்லிகளை நீக்கும் எளிய வழிவகையை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அனைத்திந்திய அளவிலான பூச்சிக்கொல்லி ஒழிப்புத் திட்டத்தின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய பூச்சிக்கொல்லி மருந்துக்கு ‘வெஜ்ஜி வாஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த புதிய ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பில் உருவாகியுள்ள இந்தப் புதிய பூச்சிக்கொல்லி மிகவும் எளிமையானது. எளிதில் இவற்றைத் தயாரித்துக் காய்கறிகளின் மீது தாக்கியுள்ள பூச்சிக்கொல்லிகளை நீக்கலாம். இதன் செய்முறையையும் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
160 மில்லி ஆசிட் அமிலம், 4 கிராம் பேக்கிங் சோடா மற்றும் 4 எலுமிச்சைப் பழங்களின் சாறு இவற்றுடன் நான்கு லிட்டர் தண்ணீர் கலந்து நன்கு கலக்கினால் பூச்சிக்கொல்லி மருந்து தயாராகிவிடும். மிகவும் எளிமையான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பூச்சிக்கொல்லி மருந்தைப் பூச்சிகள் தாக்கிய காய்கறிகளின் மீது பயன்படுத்தினால் அதிகபட்சமாக 75 சதவிகிதம் வரையிலான பூச்சித் தாக்குதல்களை நீக்கிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.