மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: குடிநீரைப் பாதுகாக்கும் பழங்குடிப் பெண்கள்!

சிறப்புக் கட்டுரை: குடிநீரைப் பாதுகாக்கும் பழங்குடிப் பெண்கள்!

ஷாநவாஸ் அலாம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகர் மாவட்டத்தில் உள்ள புற்கண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித்ரா சோரேன். குடிநீரைப் பாதுகாக்க இவர் கையாளும் முறை மிகவும் அறிவுப்பூர்வமானது. மிகவும் எளிய முறையில் சற்று உயர்வான திட்டு அமைத்து அதன்மீது பானை வைத்து அதில் குடிநீரைச் சேமித்துப் பயன்படுத்துகின்றனர். இம்முறைக்கு கர்சாடி அல்லது கிரிசுரி என்று பெயரிட்டுள்ளனர். சந்தால் பழங்குடியினர் புதிதாக இம்முறையைக் கையாளவில்லை. பாரம்பர்யமாகவே இம்மக்கள் இந்த முறையைக் கையாண்டு வருகின்றனர்.

புற்கண்டி நீர்வீழ்ச்சியின் கட்டுமானப் பகுதியாக ஃபுல்ஜோரி விளங்குகிறது. ஜமாவும் அதன் ஒரு பகுதியாக உள்ளது. இந்த ஜமாவில் சந்தால் பர்கனா பழங்குடியினர் 29.88 சதவிகிதம் உள்ளனர். இப்பகுதியின் பெரும்பான்மை மக்களாக இவர்கள் உள்ளனர். முன்பெல்லாம் மழைக்காலத்தில் மட்டுமே இவர்கள் விவசாயம் செய்வர். சமீப காலமாகத்தான் இவர்கள் நீரைச் சேமித்துவைத்து கோடைக் காலங்களிலும் விவசாயம் மேற்கொள்கின்றனர். நீர்ப்பாசனத் திட்டங்கள் அதிகரித்த பின்னர்தான் கோடையில் விவசாயம் செய்யவே பழகியுள்ளனர்.

ஹில்லி பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைப்பது பிரச்னையாக இருந்தது. இப்பகுதியில் ஆண்டுக்கு அதிகபட்சமாக 1,162 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. மக்கள் கைப்பம்புகளைப் பயன்படுத்தியும், கிணறுகளின் மூலமும் வீடுகளுக்குத் தேவையான குடிநீர் பெறுகின்றனர். பருவமழை பெய்தால் கிணறுகளில் தண்ணீர் பெருகுகிறது. கோடைக் காலங்களில் கிணறுகளில் தண்ணீர் குறைந்துவிடுகிறது. இதனால், கோடைக்காலங்களில் தண்ணீர் சகதியாக உள்ளது.

சந்தா பழங்குடியினர் பாரம்பர்யமாகவே குடிநீருக்கு அதன் தூய்மையைப் பாதுகாக்க அதிக முக்கியத்துவம் அளித்துவருகின்றனர். இவர்கள் குடிநீரை மூடப்பட்ட பானை வடிவ பத்திரத்தில் சேமித்து வைக்கின்றனர். இந்தப் பானை வீட்டின் நுழைவு முற்றத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய மண் திண்ணையின் மீது வைக்கப்படுகிறது. இந்தப் பானையிலிருந்துதான் வீட்டுக்கு வருபவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கப்படுகிறது.

பல்வேறு காரணங்களுக்காக இம்மக்கள் இந்த முறையைப் பயன்படுத்துகின்றனர். அலுமினியப் பாத்திரம், பிளாஸ்டிக் குடங்கள் ஆகியவற்றுக்கு மாற்றாக இந்தப் பானைகளை மக்கள் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். மண்பானைகளைப் பொறுத்தவரையில் மக்கள் பெரும்பாலும் அவற்றின் பாதுகாப்புக் கருதி வீட்டுக்கு வெளியே பயன்படுத்துவதே இல்லை. இன்றைய தலைமுறையினர் கர்சாடி முறையைப் பயன்படுத்த விரும்புவதில்லை. பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பயன்படுத்தத் தயங்குகின்றனர்.

இருப்பினும் பலர் நவீன முறையைக் கண்டுகொள்வதே இல்லை. ஃபுல்ஜோரி கிராமத்தைச் சேர்ந்த மகாராணி மராண்டி நம்மிடம் பேசுகையில், “கர்சாடி முறையைப் பயன்படுத்த உள்ளூரைச் சேர்ந்த சுயஉதவிக் குழுக்கள் கற்றுக்கொடுத்தன. ஆனால், தொடக்கத்தில் இதைப் பயன்படுத்த பல பெண்கள் தயக்கம் காட்டினர்” என்றார்.

பெரும்பாலான பெண்கள் கைப்பம்புகள் மூலம்தான் குடிநீர் பெற்று வருகின்றனர். தற்போது இவர்களின் குடிநீர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக திறந்தவெளி கிணறுகள் மூலம் மக்கள் குடிநீரைப் பெற்றுவந்தனர். தண்ணீரைச் சேமித்து வைப்பதுதான் மிகப்பெரும் சவாலாக உள்ளது.

2015ஆம் ஆண்டில் டேட்டா டிரஸ்ட் அமைப்பின் ஒருங்கிணைந்த வாழ்வாதார முயற்சிகளுக்கான தொடக்கம் (சி.ஐ.என்.எல்) என்ற திட்டம் தொடங்கப்பட்டது. புற்கண்டியில் நடந்த சுத்தமான குடிநீருக்கான மேலாண்மை திட்டம் என்ற பெயரில் இதுகுறித்த ஆலோனை நடத்தப்பட்டது. இச்சமூகத்தினர் குடிநீரைக் கையாள்வது குறித்த சிறந்த அறிவைப் பெற்றுள்ளனர். ஜியாமுனி பாஸ்கி கூறுகையில், “பாரம்பர்ய முறைப்படி பானைகளை வைத்து தண்ணீரை பயன்படுத்துகிறோம். பானைகளை நேரடியாக நிலத்தில் வைத்தால் பானையின் ஈரப்பதம் மண்ணில் இறங்கவும் வாய்ப்புள்ளது. இதனால் அந்த ஈர நிலத்தில் குப்பைகள் எளிதில் சேர வாய்ப்புள்ளது. மேலும், வீட்டு வளர்ப்புகள் பானையில் நேரடியாக வாய் வைத்துவிட்டாலும் தெரியாது. கீழே இருந்தால் குழந்தைகளும் எளிதில் தண்ணீருக்குள் கைவைத்து விடுவார்கள். இதனால்தான் பானைகளுக்கு மட்டும் சற்று உயர்ந்த திண்ணை அமைக்கப்படுகிறது” என்றார்.

பாரம்பர்யமாகச் சந்தால் பழங்குடியினர் பானைகளைச் சிறிது சாய்த்தே வைக்கின்றனர். தண்ணீர் எடுக்கும்போது கைப்பட்டு சுகாதாரம் கெட்டுவிடாமல் இருக்கவே இவ்வாறு செய்கின்றனர். கேர்வா கிராமத்தைச் சேர்ந்த கோரி தேவி கூறுகையில், “என் தாயின் ஆலோசனை நினைவுக்கு வருகிறது. தண்ணீரைப் பானைகளில் சேமிப்பதற்கு முன்னர் பானையைச் சுத்தம் செய்யச் சொல்லுவார். தற்போது ஒட்டுமொத்த சமூகமும் குடிநீர் பாதுகாப்பை உறுதிப்படுத்த கர்சாடி முறையில் புதுமையைக் கொண்டுவர முடிவெடுத்துள்ளது” என்றார்.

மாற்றத்தைக் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. பலர் பல்வேறு ஆலோசனைகளைக் கூறிவிட்டனர். தற்போதைய நடைமுறையே போதுமானதாக உள்ளது என்றும் பலர் கூறுகின்றனர். ஆனால், இம்முறை மூலம் சுகாதாரமான நடைமுறைகள் மற்றும் அசுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கர்சாடி அமைப்பதைவிடக் கழிவறைகள் அமைப்பதற்குப் பணத்தைச் செலவிடலாம் என்றும் சிலர் கருதினர்.

அந்த மக்களுக்குப் பாரம்பர்ய முறையில் புதுமையைச் செலுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் சந்தால் பழங்குடியினருக்கு டையேரியா போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்கலாம். ஏற்கெனவே இம்மக்கள் தண்ணீரைக் கையாள்வதைப் பற்றி சிறந்த அறிவைப் பெற்றிருந்தாலும், இவர்களுக்குச் சில நவீன முறைகளைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் இவர்களுக்கு மேலும் உதவ முடியும்.

தற்போது இக்கிராமத்தில் உள்ள 279 குடும்பங்களில் 80 குடும்பங்கள் பாரம்பர்ய முறையில் புதுமையைக் கையாண்டு தண்ணீரைச் சேமிக்கின்றன. இவர்கள் இம்முறைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த நடைமுறை அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. சந்தால் பழங்குடியின மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைப்பது பெரும் சவாலாகவே உள்ளது. இவர்கள் கர்சாடி முறையைப் பயன்படுத்தித்தான் குடிநீரின் தூய்மையை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். “வீட்டு விலங்குகளிடமிருந்தும், குழந்தைகளிடமிருந்தும் குடிநீரைப் பாதுகாக்க எங்களுக்கு கர்சாடி முறை பயன்படுகிறது” என்கிறார் ஃபுல்ஜோரி கிராமத்தைச் சேர்ந்த லில்முனி முண்டு. தினந்தோறும் காலையில் பானைகளில் உள்ள நீரை மாற்றி தூய்மையாக வைத்துக்கொள்வோம்” என்று அவர் கூறினார்.

நன்றி: வில்லேஜ் ஸ்கொயர்

தமிழில்: பிரகாசு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018