மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

திருப்பூர் புத்தகக் காட்சி!

திருப்பூர் புத்தகக் காட்சி!

சென்னைப் புத்தகக் காட்சி ஜனவரி 22ஆம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், திருப்பூரில் ஜனவரி 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது.

திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 15ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா பத்மினி கார்டனில் ஜனவரி 25ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 141 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், முன்னணி புத்தக விற்பனையாளர்கள் உள்பட மொத்தம் 94 நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.

கடந்த ஆண்டு ரூ.1.25 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனையானது. இந்தாண்டு விரிவான முறையில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா நடைபெறும் 11 நாள்களும் வாகனங்கள் மூலம் திருப்பூர் வட்டாரம் முழுமையும் பிரசாரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்தாண்டு ஒரு லட்சம் பார்வையாளர்களை வரவழைக்கவும், ரூபாய் ஒன்றரை கோடிக்குப் புத்தகங்கள் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தக அரங்குகள் திறந்திருக்கும். அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவிகித தள்ளுபடி வழங்கப்படும். ரூ.1,000க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு நூல் ஆர்வலர் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.5,000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

மேலும், இந்தாண்டுப் பள்ளியில் நூலகத்தைச் சிறப்பாகப் பயன்படுத்த ஆர்வமுடன் இருக்கும் நூறு பள்ளிகளைத் தேர்வு செய்து, அப்பள்ளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்படும் என வரவேற்புக் குழுத் தலைவர் யுனிவர்சல் எஸ்.ராஜகோபால், அறங்காவலர் அ.நிசார் அகமது ஆகியோர் கூறினர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018