மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

தள்ளிப்போன சாய்னா பயோ - பிக்!

தள்ளிப்போன சாய்னா பயோ - பிக்!

சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் தள்ளிப்போனதை அந்தப் படத்தின் நாயகி ஷ்ரதா கபூர் உறுதி செய்துள்ளார்.

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் சமீபகாலமாக அதிகமாக உருவாகிவரும் சூழ்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் கதையும் படமாக இருந்தது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி நடைபெற்றன. ஷ்ரத்தாவுக்கு சாய்னா பேட்மிண்டன் பயிற்சியளித்தார். சாய்னாவின் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவுக்கு ஷ்ரத்தா கபூருடன் அவர் நட்பானார். ஆனால், படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை.

இதுதொடர்பாக டெக்கான் க்ரோனிக்கலுக்கு அளித்த பேட்டியில் பேசிய ஷ்ரதா, “சாகோ படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறேன். சந்தேரியில் நடைபெறும் ஸ்ட்ரீ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளேன். சாய்னா திரைப்படம் கண்டிப்பாக தாமதமாக உருவாகும்” என்று கூறியுள்ளார்.

சாய்னா முதன்முறையாக ஹாரர் - காமெடி ஜானரில் நடிக்கும் படம் ஸ்ட்ரீ. ராஜ்குமார் ராவ் கதாநாயகனாக நடிக்கிறார். ஜனவரி 11ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. அமர் கௌசிக் இயக்குகிறார்.

சாகோ படத்தில் ஷ்ரதாவுடன் பிரபாஸ் இணைந்து நடிக்கிறார். “பிரபாஸ் நல்ல நடிகர் மட்டும் அல்ல. நல்ல மனிதரும் கூட. எனது முதல் இரு மொழி திரைப்படத்தில் அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்தப் படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படும்” என்றும் கூறினார். பிரபாஸின் திருமண அறிவிப்பு பற்றி கேட்ட கேள்விக்கு அதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று சிரித்தபடி பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018