மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

பியூட்டி ப்ரியா: பளபளப்பான கூந்தல் வேண்டுமா?

பியூட்டி ப்ரியா: பளபளப்பான கூந்தல் வேண்டுமா?

அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். எதைக்கேட்டாலும் ‘நேரமே இல்லை’ என்கிற சலிப்பான வார்த்தையை மிகவும் பெருமிதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

வண்டியில் செல்லும் பெண்கள் கண், தலைமுடி, முகம் என அனைத்தையும் மூடிக்கொண்டு செல்வதை தற்போது அதிகம் காண்கிறோம். பேருந்தில், ரயிலில் இறங்கி நடந்து செல்லும் தொலைவிலும் அதுபோன்று முகம் மூடிகளையே பார்க்கிறோம்.

அந்த அளவுக்கு அழகுக்கு முக்கியத்துவமா என்று அங்கலாய்த்துக்கொண்டாலும், ஒருவிதத்தில் அழகோடு ஆரோக்கியமும் அடங்கியுள்ளது. வாகனப் பெருக்கங்களாலும், வாகனப் புகையினாலும் அதிக மாசு ஏற்படுகிறது. அப்படியே கூந்தலில் படர, வேர்களில் சென்று அப்படியே தங்கிவிடுகிறது. அடிக்கடி முடி உதிர்தலுக்கு இதுவும் ஒரு காரணம். சிறு வயதிலேயே பளபளப்பு இல்லாமல் உடைந்தும், நரைத்தும் விடுகிறது.

கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒருமுறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்கவைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்து கடைகளில் கிடைக்கும். பெண்கள் தக்காளிப் பழங்களைத் தினமும் சாப்பிட்டு வர வேண்டும். இதனால், தோல் கொஞ்சம் சிவப்பாகும். தோல் சுருக்கம் மாறும். நிறமும் மாறி, சுருக்கமும் மறைந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம்விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்துவிடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணெயும் தவிர வேறு எதையும் தலையில் பட விடக் கூடாது.

அடுத்து, பனிக்காலத்தில் சிலருக்குத் தோலில் சில இடங்களில் வெடிப்புத் தோன்றும். வெடிப்புத் தோன்றிய இடங்களில் கொஞ்சம் வாஸலைனைத் தடவி வந்தால் வெடிப்பு மறைந்துவிடும்.

கண்களுக்கு மை தீட்டிக் கொள்ளும் பழக்கமுள்ள பெண்கள், படுக்கப் போகும்போது சோப்புப் போட்டு முகத்தைக் கழுவிவிட்டு அதன் பின்னரே படுக்க வேண்டும். கண் மையுடன் தூங்கக் கூடாது.

கண் மையுடன் தூங்கினால் கண்கள் சீக்கிரம் கெட்டுப் போகும். குளித்தவுடன் உடல் முழுவதும் சிறிது பவுடர் போட்டுக்கொண்டால் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

முகத்தில் தோல் உரிந்தால் அதைப் போக்க சிறிது கிளிசரின், எலுமிச்சைப் பழச்சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவுங்கள். பிறகு சோப்பு போட்டு முகத்தைக் கழுவுங்கள். உரிந்த தோல் வந்து விடும். தேங்காயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தோல் பளபளப்புக் குறையாமலும், கோளாறு ஏற்படாமலும் தேங்காய் பார்த்துக் கொள்கிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்களும், இதயநோய் உள்ளவர்களும் தேங்காயைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

முகத்தை, சோப்பு மட்டும் போட்டுக் கழுவிக் கொண்டிருக்கக் கூடாது. பயித்தம் மாவு, சிகைக்காய் ஆகியவற்றையும் கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும். இப்படிச் செய்தால்தான் முகத்தில் இருக்கும் பளபளப்பு குறையாமல் இருக்கும்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 24 ஜன 2018