மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

ஹெல்த் ஹேமா: அதிக கொழுப்பா?

ஹெல்த் ஹேமா: அதிக கொழுப்பா?

இருபாலருக்கும் பெரும் பிரச்னையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச்சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் பொது இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவது.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகிவந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடல் புத்துணர்ச்சி பெறும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டுவந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டுப் பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்திவந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகத்தைப் பாலில் காய்ச்சி குடித்துவந்தால் உடல் எடை குறையும்.

சுரைக்காயை வாரத்துக்கு இரண்டு தடவை சாப்பிட்டுவந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும், சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதன் 24 ஜன 2018