மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

டபுள் சந்தோஷத்தில் நிக்கி கல்ராணி

டபுள் சந்தோஷத்தில் நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளிவரவிருக்கிறது.

ஜீவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள படம் `கீ’. புளூ வேல் கேமால் பாதிப்புகள் வருவதைப் போலவே ஸ்மார்ட் போன் மூலம் பலர் தங்களையும் அறியாமல் எத்தகைய பிரச்சினைகளில் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதைச் சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது. காலீஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.

அதே நாளில் நிக்கி கல்ராணி கதையின் நாயகியாக நடித்திருக்கும் கலகலப்பு 2 படமும் வெளிவரவிருக்கிறது. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள இதிலும் ஜீவா நடித்திருக்கிறார். மேலும் ஜெய், சிவா, கேத்ரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவருவதாக இருந்தது. ஆனால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டதால் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனது. தற்போது இந்தப் படமும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளிவரவிருப்பதாக படக் குழு அறிவித்துள்ளது.

தான் நடித்திருக்கும் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளிவரவிருப்பதால் டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார் நிக்கி கல்ராணி.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 23 ஜன 2018