சேலம்: தேங்காய் விலை உயர்வு!

கடந்த பருவ ஆண்டில் போதிய மழை இல்லாததால் தென்னை மரங்கள் பட்டுப்போய், தேங்காய் விளைச்சல் சரிந்தது. விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பால் சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் சந்தைக்குத் தேங்காய் வரத்து குறைந்துள்ளது. இதன் விளைவாகத் தேங்காய் விலை உயர்வைச் சந்தித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில்லறை விற்பனை விலையில் தரமான பெரிய ரகத் தேங்காய் ரூ.15க்கும், சிறிய ரகத் தேங்காய் ரூ.10க்கும் விற்பனையானது. இந்நிலையில் தேங்காய் வரத்து குறைந்து போனதால் இன்று இரண்டு மடங்காக விலை உயர்ந்து தேங்காய் ஒன்றின் விலை ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.