மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

ஹாதியா முடிவு: நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை!

ஹாதியா முடிவு: நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை!

ஹாதியாவின் திருமண முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த அகிலா என்ற ஹாதியா, சேலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் படித்துவருகிறார். ஹாதியா அவரது விருப்பம் இல்லாமலேயே மதமாற்றம் செய்யப்பட்டார் என்றும் ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்கு அவரை வெளிநாட்டுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டதாகவும் கூறி அவரது தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அப்போது ஹாதியா தரப்பில் ஷாஃபின் ஜஹான் எனும் இஸ்லாமியரை மணந்துகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஹாதியாவின் திருமணம் சட்ட ரீதியாக நடக்கவில்லை என்று கூறிய உயர் நீதிமன்றம் அவரது திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த ரத்தை எதிர்த்து ஷாஃபின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தனி நபர் சுதந்திரத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் ஹாதியா தனது படிப்பைத் தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு மீண்டும் இன்று (ஜனவரி 23) விசாரணைக்கு வந்தது. அப்போது 24 வயது பூர்த்தியான ஒருவர் யாரைத் திருமணம் செய்யலாம் என்பதை அவரே முடிவு செய்துகொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 23 ஜன 2018