மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

இலக்கை அடைவாரா அருண் ஜேட்லி?

இலக்கை அடைவாரா அருண் ஜேட்லி?

இந்தியாவின் நிதியமைச்சர் அருண் ஜேட்லி வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைந்து, திட்டங்களைத் திறமையாக செயல்படுத்த முயற்சிக்க வேண்டும் என அமெரிக்க பொருளாதார நிபுணரான டி.என்.ஸ்ரீநிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழக பொருளாதாரத் துறை பேராசிரியரான ஸ்ரீநிவாசன் இதுகுறித்து மேலும் கூறுகையில், ”பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் தான் வேலையிழப்புகள் ஏற்படுவதாகக் கூறுவதற்கு எந்தவொரு கோட்பாடும் இல்லை. இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையைப் பொறுத்தவரையில் அருண் ஜேட்லி தன்னால் இயன்ற அளவுக்கு அதைக் கட்டுக்குள் வைத்திருக்கப் பாடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தத் தக்க நேரத்தில் திட்டங்களை செயல்படுத்துவதோடு கூடுதலான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டும் எனவும் நான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

செவ்வாய் 23 ஜன 2018