மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

சுதந்திரமான நீதித் துறை அவசியம்!

சுதந்திரமான நீதித் துறை அவசியம்!

'ஜனநாயகம் நிலைப்பதற்கு சுதந்திரமான நீதித் துறை அவசியமானது' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் இன்று (ஜனவரி 23) கூறியுள்ளார்.

இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக, கடந்த 12ஆம் தேதி உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி. லோகூர் ஆகிய நால்வரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி தன்னிச்சையாகச் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், இந்திய பார் கவுன்சில் எடுத்த முயற்சியின் அடிப்படையில் நீதிபதிகளுக்கிடையேயான பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மற்ற நான்கு நீதிபதிகளையும் அழைத்துப் பேசினார்.

இந்நிலையில், இன்று (ஜனவரி 23) மறைந்த பேராசிரியர் ஜார்ஜ் எச். கட்போயிஸ் எழுதிய ‘சுப்ரீம் கோர்ட் ஆப் இந்தியா: தி பிகினிங்ஸ்’ என்ற நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இந்த நூலை வெளியிட்டுப் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர், "நாட்டில் தடைகளற்ற ஜனநாயகம் நிலைப்பதற்காக, எந்த வித சார்பு இல்லாத, சுதந்திரமான நீதித் துறை செயல்படுவது மிகவும் அவசியம்" என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசும்போது, 130 கோடி மக்களில் 10 கோடி மக்கள் நேரடியாக நீதித் துறையுடன் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால், நீதித் துறை எடுக்கும் முடிவுகள், சில நேரங்களில் மக்களின் வாழ்வாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவற்றைத் தீர்க்க இன்னும் வழிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான தீர்வைக் கண்டிப்பாகத் தேட வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்தார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 23 ஜன 2018