மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

பயணம் கஜானாவை நோக்கியதல்ல!

பயணம் கஜானாவை நோக்கியதல்ல!

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது ரசிகர்கள் மத்தியில் பேசும்போது, “நமது பயணம் கஜானாவை நோக்கியதல்ல, மக்களின் முன்னேற்றத்தை நோக்கியது” என்று குறிப்பிட்டார்.

கமல் தனது அரசியல் பயணத்தை பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ராமேஸ்வரத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கவுள்ளதாக அவர் கூறிய நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து ரசிகர்களிடம் ஆலோசனை நடத்திவருகிறார். 2ஆம் நாளான இன்று 27 மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்தித்துப் பேசினார்.

பின்னர் ரசிகர்கள் மத்தியில் பேசிய கமல், “நாம் அடிக்கடி கூடுபவர்கள்தான். தற்போது, லட்சியம் மாறியுள்ளது. மக்களை நோக்கிய பயணம்தான் அது. இந்தப் பயணத்தை 37 ஆண்டுகளாகவே நாம் செய்துவருகிறோம். நாம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

மேலும், “நம்முடைய இலக்கு கஜானாவை நோக்கிச் செல்வதல்ல. மக்களின் முன்னேற்றத்தை நோக்கியது. பரந்த, சிறந்த அளவில் செய்ய வேண்டும். இதன் வீச்சு அதிகமாக இருக்க வேண்டும் என்று சென்றுகொண்டிருக்கிறோம். நமது பாதை நீளமானது. இதற்கு முன் உங்களிடம் ஜாதி,மதம் போன்றவற்றை நான் கேட்டதில்லை. இனியும் அப்படிதான் இருக்கும். இதற்கு முன் நீங்கள் எந்தக் கட்சி எனக் கேட்டதில்லை. ஆனால், இனி கேட்பேன்” என்று தெரிவித்தார்.

"நம்முடன் நிறையப் பேர் சேரவுள்ளனர். அவர்களுக்கு நீங்கள் மூத்த அண்ணன்கள். அந்த கண்ணியத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் கோஷங்கள் கண்ணியமாக இருக்க வேண்டும். பிதற்றலான போஸ்டர்கள் ஒட்டாதீர்கள். வாசகங்களைக் கூட நிர்வாகிகளிடம் கேட்டு எழுதுங்கள். இப்போது நீங்கள் என்ன செய்தாலும் கவனிப்பார்கள்” என்று ரசிகர்களைப் பார்த்துக் கூறிய கமல், கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாம் யாரையும் தேவையில்லாமல் சாடக் கூடாது; இனி நமது பயணம் விரைவாகவும், நல்லபடியாகவும் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம் என்றும் அவர் தெரிவித்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 23 ஜன 2018