மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

பஸ் வாங்குற மாதிரி எம்.எல்.ஏக்களை வாங்குவாங்களா :அப்டேட் குமாரு

பஸ் வாங்குற மாதிரி எம்.எல்.ஏக்களை வாங்குவாங்களா :அப்டேட் குமாரு

ஜல்லிக்கட்டு போராட்டம் போனவருசம் இன்னைக்கு தான் ஆரம்பிச்சுது. உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த போராட்டம் வெற்றியடைஞ்சு ஜல்லிக்கட்டை வெற்றிகரமா ரெண்டாவது வருசமா நடத்தி முடிச்சுருக்கோம். இந்த நாளை கோலாகலமாக கொண்டாடக் கூட முடியாமல் தமிழ் நாட்டு மக்கள் அடுத்த போராட்டத்துல இறங்கிட்டாங்க. அன்பே சிவம் கமல் மாதிரி தான் தமிழ் நாட்டு மக்கள் வாழ்க்கையாகிப் போச்சுன்னு நண்பர் ஒருத்தர் சொன்னாரு. கிளைமாக்ஸ்ல கமல் நடந்து போற ஞாபகம் வந்துச்சு. அட ஆமாம்ல.. நிதிச்சுமை அதிகமாயிருச்சுன்னு தானே டிக்கெட் விலையை ஏத்துனாங்க, அப்புறம் எங்க இருந்து 2000 பஸ்ஸை வாங்கபோறாங்கன்னு கேட்குறாங்க. இது கூட பரவாயில்லை சார். புது பஸ் வாங்குறதுக்கு டிக்கெட்டை கூட்டுனீங்க சரி. எம்.எல்.ஏ சம்பளத்தை கூட்டுனீங்களே புதுசா எம்.எல்.ஏக்களை வாங்கப்போறீங்களான்னு மீம்ஸ் போடுதாங்கப்பா. புதுசா வாங்குறதுக்கு முன்னால இப்ப இருக்குறவங்க எல்லாம் அப்படியே இருக்காங்களான்னு கொஞ்சம் எண்ணி பார்த்துகிட்டா நல்லா இருக்கும். என்ன நான் சொல்றது..

@MJ_twets

உங்கள மாதிரியே நானும் இருக்கணும்னா அப்புறம் என்னய மாதிரி யார் தான் இருப்பா ?

@Kozhiyaar

கூட்டத்தின் நடுவே எவரும் பார்க்காத வண்ணம் கைப்பேசி இயக்குவது சிலருக்கு மட்டுமே 'கை' வந்த கலை!!!

@manipmp

காட்டை விட்டு

தனிக்குடித்தனம் வந்தது

கோயில் யானை

@MJ_twets

கடைசிப் பக்கம் இல்லாத

கதைப் புத்தகம் #பாட்டி !

@Maga_raja

மத்தவங்க 5 நிமிசத்துல கத்துக்குற ஒரு விசயத்தை,

நாம கத்துக்க 15 நிமிசம் ஆகுதுனா,

அந்த 10நிமிசத்துல இந்த உலகம் நம்மள எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப்படுத்தும்!!!

@naatupurathan

பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளத்தை விட இந்தியா பின்தங்கியது -செய்தி!

ஆறு மாசத்துக்கு ஒருக்கா ஒரு புதிய இந்தியாவை கொற பிரவசத்துல பெத்துப்போட்டா இப்டி பஞ்சப் பரதேசமாத்தானேயா வளரும்...!!!

@JanuBhaskar

சன் டிவியில் இன்று காலை செய்தி:

இராமநாதபுரம் கமுதியில் ஒரு தனியார் நிறுவனத்தின் சோலார் தகடுகள் மேல் தெளிக்க ஒரு நாளைக்கு 3லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதால் அப்பகுதியி்ல் நீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாம்.

அதானியின் நிறுவனம் என வெளிப்படையாகச் சொல்ல சன்டிவி ஏன் தயங்குகிறது?

@AlaTwitz

தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை மீது வழக்கு பதிவு செய்தது சிபிஐ - செய்தி

அம்மா வழியில் ஆட்சினு சொன்னாங்க, அதுக்காக..

@deebanece

மாசத்துக்கு நாலு விலையேற்றம் பண்றிங்க,

ஆனா இன்க்ரிமெண்ட் வருஷத்துக்கு ஒருதபா மட்டும்னா எப்புடி ...

@mufthimohamed1

மல்லிகைப்பூ ஒரு கிலோ ஆறாயிரம் ரூபாய்க்கு விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி - செய்தி

கணவன்மார்கள் அதிர்ச்சி !!

@devil_girlpriya

ரேசனில் ஒரு பருப்பு மட்டுமே தரப்படும் - செல்லூர் ராஜூ

அப்ப பாதாம் பருப்பு கொடுங்க ஜி

@Tamil_Zhinii

யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு பாதிப்பில்லை - ஓபிஎஸ்

உங்க கட்சியே பாதியா தான இருக்கு...

@Kozhiyaar

இங்கே போராளியாக தெரிய, 'டிபி'யை மாற்றினால் போதுமானதாக இருக்கிறது!!

@thoatta

போன ஜனவரி ஜல்லிக்கட்டுல இருந்து இந்த ஜனவரில பஸ் கட்டண உயர்வு வரைக்கும் மக்களே போராட்டம் பண்றங்க, சாந்திமுகூர்த்தம் நடத்த போற மாதிரி, போராட்டம் நடத்த தேதி திமுக குறிச்சுக்கிட்டு இருக்கு. சிக்ஸர் அடிக்கவேண்டிய பாலை எல்லாம் சிங்கிள் ஆடிக்கிட்டு இருக்காங்க

@senthilcp

சோறு கண்ட இடம் சொர்க்கம்னு நாம மட்டும் வாழுறோம் போல

அப்டி சொல்ல முடியாது,டிபன் கண்ட இடம் டிவைன்னு வாழ்றவங்களும் உண்டு

@Tamil_Zhinii

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன் - கமல்

ஆண்டவர் ஆயுள் ரேகை தமிழ்நாட்டு பாடர தாண்டி நார்த்துக்கு போய்டுச்சு...

@senthilcp

தலைவரே!ஏற்கனவே இருக்கற பஸ்களே நட்டத்துல ஓடுது,அதை சரி செய்யாம புதுசா பஸ் வாங்கறது எதுக்கு?

அப்றம் எப்டி கமிஷன் கிடைக்கும்?

@Ashok_Apk

நாம் நோக்கிச் செல்வது கஜானாவை நோக்கி அல்ல; மக்களை நோக்கிய பயணம் இது - நடிகர் கமல் பேச்சு

விபத்து இல்லாத பயணமா இருந்தா சரி ..

@abuthahir707

நடந்து போனால் உடம்பு குறையும் என்ற காலம் போயி காசு மிச்சமாகும் என்ற காலத்திற்கு வந்துவிட்டோம்

@Kozhiyaar

நான் என்ன படிக்க வேண்டும் என்பதை அரசியலும் பொருளாதாரமும் தீர்மானிக்கும் நாட்டில் நியாயமும் தர்மமும் நாண்டுகிட்டு தான் சாகணும்!!

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 23 ஜன 2018