மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

1200 சிலைகள் கடத்தல்!

1200 சிலைகள் கடத்தல்!

தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 1200 பழங்காலச் சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத் துறை தெரிவித்துள்ளது.

செம்பு, பித்தளை, காரீயம், வெள்ளி, தங்கம் ஆகிய ஐம்பொன்னும் சேர்ந்திருக்கும் சிலைகளும், பச்சை மரகதலிங்கமும் அதிக அளவு கடத்தப்படுகின்றன. சிலைக் கடத்தல் கும்பல்கள் நவீன தொழில்நுட்ப உதவியோடு பல கோடி மதிப்பிலான சிலைகளைக் கடத்தி அயல் நாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் பெரும்பாலான சிலைகள் கடத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது. அதாவது 1992ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகளில் 1200 சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத் துறை தெரிவித்துள்ளது.

“இவற்றில் 18 சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. 50 சிலைகள் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. அவற்றை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 350 சிலைகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரியப்படவில்லை என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36,995 கோயில்களில் 11,500 கோயில்களில் மட்டுமே சிலைகளை பாதுகாக்கத் தேவையான வசதிகள் உள்ளன. மற்ற கோயில்களில் சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகக் கூறப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 23 ஜன 2018