மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

ஷாருக் கானுக்குக் கிடைத்த கௌரவம்!

ஷாருக் கானுக்குக் கிடைத்த கௌரவம்!

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் நடிகர் ஷாருக் கானுக்கு கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டுள்ளது .

உலகப் பொருளாதார மாநாடு ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டின் தொடக்க நாளான இன்று (ஜனவரி 23ஆம் தேதி) பிரதமர் மோடி உரை நிகழ்த்தவுள்ளார். பிரதமருடன் அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், சுரேஷ் பிரபு, தர்மேந்திர பிரதான், எம்.ஜே.அக்பர், ஜிதேந்திர சிங் ஆகிய ஆறு மத்திய அமைச்சர்களும், தேவேந்திர பத்னாவிஸ், சந்திரபாபு நாயுடு ஆகிய இரண்டு முதலமைச்சர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். பிரதமருடன் செல்லும் 100 பேர் கொண்ட தொழிலதிபர்கள் குழுவில் நடிகர் ஷாருக் கான் இடம்பெற்றுள்ளார்.

சர்வதேச பாதுகாப்பு, சுற்றுச்சூழல், உலகளாவிய பொருளாதாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி இந்த மாநாட்டில் 40 அமர்வுகளில் 70 நாடுகளின் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர். மாநாட்டின் இறுதி நாளான 26ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் உரை நிகழ்த்துகிறார். இந்த மாநாட்டின் இடையே டிரம்ப்புடன் மோடி பேச்சு நடத்தவும் வாய்ப்புள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 23 ஜன 2018