மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

பிரதமருக்கு ரத்தத்தில் கடிதம்!

பிரதமருக்கு ரத்தத்தில் கடிதம்!

தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் மோடிக்கும்,உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் பொறியியல் படிக்கும் தனது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்து,தொடர்ந்து மிரட்டிவருவதாகப் பெண்ணின் தந்தை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து பாரபங்கி பகுதியைச் சேர்ந்த திவ்யா பாண்டே, அங்கித் சர்மா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப் பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து ஜனவரி 20ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண், ரத்தத்தில் பிரதமர் மோடிக்கும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், “இதுவரை குற்றவாளிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.வழக்கைத் திரும்பப்பெறுமாறு எனக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறார்கள். எனக்கு நீதி கிடைக்கவில்லையெனில், நான் தற்கொலை செய்துகொள்வேன்” எனக் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 23 ஜன 2018