மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

அதிமுக அம்மா அணி: டெல்லியில் வழக்கு!

அதிமுக அம்மா அணி: டெல்லியில் வழக்கு!

அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட அனுமதிக்குமாறு தினகரன் தரப்பிலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைந்த பிறகு தினகரன் அதிமுகவிலிருந்து ஒதுக்கப்பட்டார். இதையடுத்து ஒருங்கிணைந்த அணிகள், தினகரன் அணி என இரு தரப்பிலிருந்தும் தங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. பல கட்டங்களாக நடைபெற்ற விசாரணையில் கட்சியின் கொடி, சின்னம் ஆகியவற்றை எடப்பாடி-பன்னீர் தலைமையிலான அதிமுகவுக்கு வழங்கிக் கடந்த நவம்பர் 23ஆம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. சின்னம் கிடைக்காத நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக நின்ற தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனைத் தோற்கடித்தார்.

இதையடுத்து, கடந்த சில வாரங்களாக தினகரன் தனிக்கட்சி தொடங்கப்போவதாகச் செய்திகள் வெளியாகியன. ஆனால் தான் தனிக்கட்சி தொடங்கவில்லை என்றும், துரோகிகளின் கையில் உள்ள இரட்டை இலைச் சின்னத்தை மீட்கவே போராடுவதாகவும் தினகரன் தெரிவித்திருந்தார்.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பெற்ற வெற்றி, தங்கள் தரப்புக்குப் பொதுமக்களிடம் உள்ள வரவேற்பு ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தங்களுக்கு குக்கர் அல்லது வேறேதும் தனி சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 23 ஜன 2018