மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

இந்திய அணியை விட்டுக்கொடுக்காத ரவி சாஸ்திரி

இந்திய அணியை விட்டுக்கொடுக்காத ரவி சாஸ்திரி

தென்னாப்ரிக்காவுடன் டெஸ்ட் தொடரை இழந்தபோதும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டதாகக் கூறியுள்ளார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடிவருகிறது. கேப் டவுனிலும் செஞ்சூரியனிலும் நடந்த டெஸ்ட் போட்களில் இந்திய அணி தோல்வி கண்டு 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை (ஜனவரி 24) தொடங்குகிறது.

இந்நிலையில், ரவி சாஸ்திரி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று அளித்த பேட்டியில், “உள்ளூரைப் பொறுத்தமட்டில் நமக்கு சூழ்நிலை நன்கு தெரியும். இதனால் நாம் அதிகம் கஷ்டப்பட வேண்டிய தேவையில்லை. இங்குள்ள சூழ்நிலை நமக்கு முழுமையாகத் தெரியாது. மேலும் 10 நாட்களுக்கு முன்பு இங்கு வந்து பயிற்சி எடுத்திருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம். அதனைத் தோல்விக்கான காரணமாகச் சொல்ல முடியாது. ஏனெனில் ஒரே மாதிரியான பிட்ச்சில்தான் இரு அணிகளும் விளையாடுகின்றன. 2 டெஸ்டிலும் நாம் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றினோம். அதனால் 2 டெஸ்டிலும் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கடைசி டெஸ்ட் சிறப்பான போட்டியாக அமையும். கடைசி டெஸ்டில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

அடுத்து இந்திய அணி பங்கேற்கவுள்ள டெஸ்ட் போட்டிகள் குறித்துப் பேசிய அவர், “இங்கிலாந்து, ஆஸ்திரேலிய பயணத்தின்போது டெஸ்ட் வீரர்களை முன்கூட்டியே அனுப்பி பயிற்சி எடுப்பது குறித்து கவனத்தில் கொள்ளப்படும். நமது பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் சாய்ப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பவுலர்கள் சிறப்பாகச் செயல்பட்டு எல்லா விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இது நல்ல அறிகுறி. நாம் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நமது அணியின் செயல்பாடு நம்பர் ஒன் அணியைப் போல்தான் இருந்தது. நமது நாட்டுக்கு வரும்போது வெளிநாட்டு அணிகள் இதில் பாதி அளவுகூடச் சிறப்பாகச் செயல்படுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 23 ஜன 2018