மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

ஆளில்லா சூப்பர் மார்கெட் : அமேசான்!

ஆளில்லா சூப்பர் மார்கெட் : அமேசான்!

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ஆளில்லா சூப்பர் மார்க்கெட்டை அமேசான் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது.

`அமேசான் கோ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் மார்க்கெட், பணியாளர்கள் இல்லாமல், பில் போட வரிசையில் நிற்காமல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமேசான் கோ சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் ஆரம்பிப்பதற்கு முன் ஸ்மார்ட்போனில் அமேசான் கோ என்ற செயலி மூலம் வாடிக்கையாளர்கள் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.

இந்த மார்க்கெட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மேலே வைக்கப்பட்டிருக்கும் கேமரா மற்றும் சென்சார்கள் வாடிக்கையாளரை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் வாங்கும் பொருட்கள் என்ன, திரும்ப வைக்கும் பொருட்கள் என்ன என்பதையும் பதிவு செய்யும் திறன் கொண்டது. ஷாப்பிங் முடிந்து வாடிக்கையாளர்கள் வெளியே செல்கையில், எடுத்துச் செல்லும் பொருட்களுக்கான தொகை கணக்கிடப்பட்டு அவர்களின் கிரெடிட் கார்டிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். இதனால் பில் போட வரிசையில் நிற்க வேண்டிய தில்லை.

அமேசான் கோ சூப்பர் மார்க்கெட் குறித்து நிறுவனத்தின் துணைத் தலைவர், "சுமார் நான்கு ஆண்டுகளாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இந்த சூப்பர் மார்கெட், சோதனை அடிப்படையில் ஊழியர்களுக்காகத் திறக்கப்பட்டது. ஆனால் ஒரே மாதிரி உருவ அமைப்புடையவர்களை அடையாளம் காண்பதிலும், பொருட்களை வெவ்வேறு இடங்களில் குழந்தைகள் மாற்றி வைப்பதிலும் சில சிக்கல்களை ஏற்பட்டது. தற்போது அதனை சரி செய்து மீண்டும் தொடங்கியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 23 ஜன 2018