மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

பாஜக கூட்டணியை உதறிய சிவ சேனா!

பாஜக கூட்டணியை உதறிய சிவ சேனா!

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடவுள்ளதாக சிவ சேனா அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவின் பிரதான கட்சிகளில் ஒன்று சிவ சேனா. பால் தாக்கரேவால் தொடங்கப்பட்ட இக்கட்சியின் தற்போதைய தலைவர் உத்தவ் தாக்கரே. பாஜகவும் சிவ சேனாவும் 29 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்துவருகின்றன. கடந்த 2014ஆம் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி முறிந்தாலும் தேவேந்திர பத்னாவிஸ் தலைமையில் நடைபெற்றுவரும் பாஜகவின் ஆட்சியில் சிவ சேனாவும் ஓர் அங்கமாக இருந்துவருகிறது.

எனினும், சிவ சேனா - பாஜக இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து மோதல் இருந்துவருகிறது. கடந்த அக்டோபர் மாதம் செய்தியாளர்களிடம் பேசிய சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவுத், மோடி அலை மங்கிவிட்டதாகத் தெரிவித்தார். ராகுல் காந்திக்கு அவர் புகழாரமும் சூட்டினார். குஜராத் தேர்தல் முடிவு குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது, தேர்தலில் உண்மையான வெற்றியாளர் காங்கிரஸ்தான் என்று கூறியிருந்தது சிவ சேனா. இது பாஜகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு மும்பையில் இன்று (ஜனவரி 23) கூடியது. இதில், எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களையும் சிவ சேனா தனியாகச் சந்திக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “இந்துத்துவா கொள்கைகளை முன்னிறுத்தி ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவோம்” என்றார். மேலும், மகாராஷ்டிராவில் கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுவதை நிதின் கட்கரி விமர்சித்ததற்குத் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.

இந்தக் கூட்டத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 இடங்களில் 25 இடங்களைப் பிடிக்கவும், சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 150 இடங்களைக் கைப்பற்றவும் சிவ சேனா சபதமெடுத்துள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 23 ஜன 2018