அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் நடவடிக்கை!

முறையான அனுமதியின்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடியில் இதுவரை ஜல்லிக்கட்டு நடந்ததில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.