மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

பேருந்துக் கட்டண உயர்வு: ஜி.வி.பிரகாஷ் கருத்து!

பேருந்துக் கட்டண உயர்வு: ஜி.வி.பிரகாஷ் கருத்து!

பேருந்துக் கட்டண உயர்வுச் சுமையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அண்மையில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டிக்கெட் விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டதால் மக்களிடையே அந்தச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பேருந்துக் கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதியடைந்துவருகின்றனர். இந்தக் கட்டண உயர்வைக் கண்டித்துத் தமிழகமெங்கும் மாணவர்கள், பொதுமக்களின் போராட்டம் 3ஆவது நாளாகத் தொடர்கிறது.

சென்னை, கோவை, விழுப்புரம், சேலம், தஞ்சை, குடந்தை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். திரைப் பிரபலங்கள் பலரும் இந்தக் கட்டண உயர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும், பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து தனது கருத்துக்களை முன்வைத்துவரும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “விவசாய ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்க முடியாத பேருந்துக் கட்டண உயர்வுச் சுமையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 23 ஜன 2018