மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

மலேரியாவால் உயிரிழப்பு இல்லை!

மலேரியாவால் உயிரிழப்பு இல்லை!

தமிழகத்தில் கடந்த ஏழாண்டுகளில் மலேரியா நோயினால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை பயிற்சி நிலையத்தில் மலேரியா ஒழிப்பு கருத்தரங்கை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜனவரி 23) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செயலர் ராதா கிருஷ்ணன், இயக்குநர் குழந்தை சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொழுநோய் பிரிவில் 20 ஆண்டுகள் விபத்தில்லாமல் ஓட்டுநராக பணிபுரிந்துவரும் 2 ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சார்பாக 4 கிராம் தங்க நாணயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் , கொசுக்களால் பரவும் தொற்று நோய்களான டெங்கு, சிக்குன்குன்யா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்கப் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நோய்கள் கட்டுக்குள் உள்ளது.

2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியா இல்லாத இந்தியா என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, தமிழகத்திலும் 2022ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை ஒழிக்க வேண்டும். அதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் இதுவரை மலேரியா நோயினால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 23 ஜன 2018