மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

சமூக நீதியை அழிக்க சதி!

சமூக நீதியை அழிக்க சதி!

நீட் தேர்வு போன்ற சமூகநீதி பிரச்னையிலும் மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்படப் போகிறதா என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் வரும் மே மாதம் 6 ஆம் தேதி மருத்துவத்திற்கான நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் சென்ற முறை நடந்த நீட் தேர்வில் பல்வேறு விதமான கேள்வித்தாள்கள் கேட்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் என்ற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் திட்டத்தின் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சரின் கருத்து குறித்து இன்று (ஜனவரி 23) கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 18.1.2018 அன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒரு தகவலைத் தெரிவித்தார்.இந்தியா முழுவதும் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களை மனதில் கொண்டு மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து நீட் தேர்வு கேள்வித்தாள்களைத் தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இந்த அறிவிப்பிற்கு முற்றிலும் மாறாக 21.1.2018 நாளேடுகளில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது.மருத்துவப் படிப்பில் சேர நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் படியே கேள்வித்தாள் தயாரிக்கப்படும் என்று அதே அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார் .இது எவ்ளவுப் பெரிய கொடுமை, இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 23 ஜன 2018