மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

மலாலாவுடன் கைகோர்க்கும் ஆப்பிள்!

மலாலாவுடன் கைகோர்க்கும் ஆப்பிள்!

சர்வதேச அளவில் ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களின் கல்விக்கு உதவுவதற்காக மலாலாவுடன் இணைந்து நிதி திரட்ட ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

உலகெங்கும் உள்ள பெண்களின் கல்வித்தரத்தை உயர்த்த பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய், நிதி திரட்டி வருகிறார். இந்தத் திட்டத்திற்காக 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது மலாலாவுடன் இணைந்து 1 லட்சம் ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களை பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில், உலகப்புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனமும் இணைந்துள்ளது. மலாலாவில் இந்த திட்டத்தால் இந்தியா மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், லெபனான், துருக்கி, நைஜீரியா உட்பட பல நாடுகளின் பெண்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

இது குறித்து மலாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தங்களது எதிர்காலத்தை தாங்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகள், தொண்டுகள் ஆகியவற்றின் மூலம் உலகில் உள்ள மக்களுக்கு கல்வி மற்றும் அதிகாரத்தை அளித்து உதவி வருகிறது. பெண்களுக்காக நிதி வழங்குவதன் மதிப்பை ஆப்பிள் நிறுவனம் தெரிந்து முன்வந்ததற்கு எனது நன்றி' என கூறினார்.

கல்விக்கான முக்கியத்துவம் என்பது உலக பிரச்சினை என்பதால் இதனை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் சமாளிக்க வேண்டிய ஒன்று. ஆனால் இதே கொள்கையைக் கொண்ட அனைத்து தரப்பினரும் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டால், அத்தகைய பிரச்சனையின் அளவைகுறைக்க முடியும் என்று நம்புகிறார் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 23 ஜன 2018