மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

தம்பிதுரை கூறுவது எங்களுக்குப் பொருந்தாது!

தம்பிதுரை கூறுவது எங்களுக்குப் பொருந்தாது!

தேசியக் கட்சிகளுக்கும் நோட்டாவுக்கும்தான் போட்டி என்பது பாஜகவுக்குப் பொருந்தாது என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை மத்திய பாஜக அரசு பின்னின்று இயக்கி வருகிறது என்று கூறப்பட்ட நிலையில், அதிமுக - பாஜக இடையிலான நெருக்கம் சமீபகாலமாக குறைந்துவருவதாகத் தகவல் வெளியாகியது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, "திராவிடத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. தேசியக் கட்சிகள் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள். தமிழகத்தில் டெபாசிட் வாங்க முடியாத நிலையில்தான் தேசியக் கட்சிகள் உள்ளன. நோட்டாவை விடக் குறைவான வாக்குகளைப் பெற்றதுதான் தேசியக் கட்சிகளின் சாதனை" என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்திருந்தார். எங்களுக்குப் போட்டி என்பது தேசியக் கட்சிகள் அல்ல. தேசியக் கட்சிகளுக்கு நோட்டாவுடன்தான் போட்டி என்றும் தொடர்ந்து கூறிவருகிறார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 23 ஜன 2018