இந்தியாவின் அதிவேக ரயில்கள்!

மணிக்கு 176 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய இரண்டு அதிவேக ரயில்கள் சென்னை ஐசிஎஃப் ஆலையில் உருவாக்கப்பட்டு வருவதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது
இந்தியாவின் அதிவேக ரயிலான காதிமான் எக்ஸ்பிரஸ் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. புதிதாக அறிமுகமாகவிருக்கும் ரயில் எண் 18, மற்றும் ரயில் எண் 20 ஆகிய இரண்டு ரயில்களும் மணிக்கு 176 கிலோ மீட்டர் ஓடக்கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்விரு ரயில்களும் தற்போது சென்னை ஐசிஎஃப் ஆலையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்தில் சதாப்தி ரயில்களுக்குப் பதிலாக ரயில் எண் 18ம், 2020ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குப் பதிலாக ரயில் எண் 20ம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.