மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

மூன்று நாள்களில் டப்பிங்கை முடித்த ரஜினி

மூன்று நாள்களில் டப்பிங்கை முடித்த ரஜினி

ரஜினியின் அரசியல் நுழைவுக்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் காலா படத்தின் டப்பிங் பணிகளையும் அவர் விரைவாக முடித்துள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் காலா படத்தின் காட்சிகள் மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பு, சென்னையில் தாராவி செட் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட படப்பிடிப்பு என அடுத்தடுத்த ஷெட்யூல்களில் விரைவாக படமாக்கப்பட்டன. குறைவான நேரத்திலேயே படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு கட்டத்தில் எந்திரன் 2.0 படத்திற்கு முன்னதாகவே காலா படம் வெளியாகும் என ஒரு வதந்தி பரவியது. இதன் இறுதிக் கட்டப் பணிகளும் அதே வேகத்தில் நடைபெறுவதால் ரஜினியும் அரசியல் பணிகளுக்கிடையேயும் டப்பிங் பணிகளை விரைவாக முடித்துள்ளார்.

சென்னை - நாக் ஸ்டூடியோஸில் (Knack studios) காலா படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் ரஜினி சனிக்கிழமை (ஜனவரி 19) முதல் தனது காட்சிகளுக்காக டப்பிங் பேசத் தொடங்கினார். அதன் புகைப்படங்கள் அப்போதே வெளியாகின. இந்நிலையில் நேற்று (ஜனவரி 22) மூன்றாவது நாளில் ரஜினி தனது மொத்த காட்சிகளுக்கும் டப்பிங் பேசி முடித்துள்ளார். இதன் இறுதிக் கட்டப் பணிகள் இரு மாதங்களில் முடிந்து படம் தயாராகிவிடும் எனக் கூறப்படுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 23 ஜன 2018