முதல் பெண் டாக்ஸி ஓட்டுநருக்கு சாதனை விருது!


தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்ஸி ஓட்டுநரான செல்விக்கு `முதல் பெண்மணி' (First Lady) விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார்.
இந்திய அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்களுக்கு `முதல் பெண்மணி சாதனையாளர்கள்' விருது வழங்கி கெளரவித்துவருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு முதல் பெண்மணிக்கான விருதுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து 112 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் பெங்களூரைச் சேர்ந்த செல்வி என்பவரும் ஒருவர். தென்னிந்தியாவின் முதலாவது பெண் டாக்ஸி ஓட்டுநரான செல்வி, தனது 14ஆவது வயதில், கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டவர். கணவரின் சித்ரவதையைத் தாங்க முடியாமல், 18ஆவது வயதில் கணவரைப் பிரிந்துவிட்டார். டாக்ஸி டிரைவராகப் பணிபுரியத் தொடங்கி, தற்போது சொந்தமாக டாக்ஸி நிறுவனம் நடத்திவருகிறார்.