மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

மிளகு இறக்குமதி: விவசாயிகள் கோரிக்கை!

மிளகு இறக்குமதி: விவசாயிகள் கோரிக்கை!

வெளிநாடுகளிலிருந்து இலவச ஒப்பந்த அடிப்படையில் அதிகளவில் மிளகு இறக்குமதி செய்யப்படுவதால் பாதிக்கப்படும் உள்நாட்டு விவசாயிகள், மிளகுக்கான இலவச இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அரசிடம் முறையிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய மிளகு, மசாலா வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் தோட்டக்காரர்கள் கூட்டமைப்பு மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கைக் கடிதத்தில், “தெற்காசிய இலவச வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்திய - இலங்கை இலவச வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக அதிகளவில் மிளகு இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படுகிறது.மேலும், வியட்நாமிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மிளகும் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுகிறது. இலங்கையின் மிளகு உற்பத்தி அளவு 10,000 டன்னாக இருந்தபோது 2003 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் தான் இலவச வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இப்போது இலங்கையின் மிளகு உற்பத்தி அளவானது 28,000 டன்னைத் தாண்டியுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 23 ஜன 2018