மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

புதுச்சேரி அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்வு!

புதுச்சேரி அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தைப் புதுச்சேரி அரசு உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை அரசு உயர்த்தியது. இந்தக் கட்டண உயர்வினால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். கல்லூரி மாணவ மாணவியர், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என அனைவரும் இந்தக் கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழக அரசு உயர்த்திய பேருந்து கட்டணத்துக்கு இணையாகக் கட்டணத்தை உயர்த்தப் புதுச்சேரி அரசு முடிவு செய்து, தமிழகத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் எனப் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு ஈ.சி.ஆர். வழியாக வரும் பேருந்து கட்டணம் 100 ரூபாயில் இருந்து 145 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பைபாஸ் வழியாக வரும் பேருந்துகளில் 140 ரூபாயாகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பேருந்து கட்டணம் 200 ரூபாயில் இருந்து 315 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுவை - பெங்களூரு பேருந்து கட்டணம் 215 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும், புதுவை - காரைக்கால் பேருந்து கட்டணம் 80 ரூபாயில் இருந்து 120 ரூபாயாகவும், புதுவை - திருப்பதி கட்டணம் 170 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது எனப் புதுவை அரசு தெரிவித்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 23 ஜன 2018