மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

முகநூலில் கழகத்தின் கதை!

முகநூலில் கழகத்தின் கதை!

அதிமுகவைப் பற்றி 'கழகத்தின் கதை' என்று எழுதப்பட்ட நூலின் தொடர்ச்சியை வரும் 29ஆம் தேதி முதல் முகநூலில் எழுதவுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். தொடங்கி ஜெயலலிதா மறைவிற்குப் பிறகான அதிமுகவரை, கழகத்தின் கதை: அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை என்ற தலைப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய நூல் கடந்த ஜூலை மாதம் பெரம்பலூரில் வெளியிடப்பட்டது. நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, இதன் இரண்டாம் பாகத்தை முகநூலில் எழுதவுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஜனவரி 23) முகநூலில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதலமைச்சராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து அக்கட்சியில் பதவிக்காக நடந்த கூத்துகள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தலைகுனிய வைத்தன. இதை அம்பலப்படுத்தும் வகையில் அதிமுகவின் தோற்றம் முதல் அன்றைய நிலை வரையிலான நிகழ்வுகளை ‘‘கதை கேளு... கதை கேளு... கழகத்தின் கதை கேளு!’’ என்ற தலைப்பில் 18.02.2017 அன்று தொடங்கி 27.04.2017 வரை 69 நாட்களில் 64 அத்தியாயங்களை எனது முகநூல் பக்கத்தில் எழுதினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது நூலாகத் தயாரிக்கப்பட்டு மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், “அதிமுகவில் பதவிச் சண்டைகளும், கூத்துகளும் இன்னும் ஓயவில்லை. அதுபற்றியும் நான் எழுத வேண்டும் என்று என்னை நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசியில் பேசுபவர்களும் அன்புக்கட்டளை பிறப்பித்து வருகிறார்கள். அன்புக் கட்டளைகளை தட்டிக்கழிக்க முடியுமா? முந்தைய தொடரில் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப் பட்டது முதல் அதிமுக அணிகளின் இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது வரையிலான வரலாறு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்குப் பிந்தைய நிகழ்வுகளை இம்மாதம் 29ஆம் தேதி முதல் முகநூலில் பதிவு செய்ய உள்ளேன். படிக்கக் காத்திருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 23 ஜன 2018