மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

பத்மாவத் :தடை இல்லை!

பத்மாவத் :தடை இல்லை!

பத்மாவத் திரைப்படத்திற்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

தீபிகா படுகோன் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள படம் 'பத்மாவத்'. ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினியின் வரலாறு தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கர்னி சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. பல்வேறு சிக்கல்களைக் சந்தித்து இப்படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்திற்குத் திரைப்படத் தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநில அரசுகள் படத்தைத் திரையிடத் தடை விதித்தன. தடையை எதிர்த்துப் படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 17ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சந்திரசூட், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

இந்த மனுமீதான விசாரணையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “திரைத்துறையைப் பொறுத்தவரை ஒரு படத்தை வெளியிடுவதா வேண்டாமா என்பதைத் தணிக்கை சான்றிதழ்தான் முடிவு செய்ய வேண்டும். அந்தச் சான்றிதழ் பத்மாவத் திரைப்படத்திற்குக் கிடைத்த பின்பும், ஏன் மாநில அரசுகள் தடை விதிக்கின்றன? தணிக்கைத் துறை அனுமதியளித்த படத்தைத் தடை செய்ய மாநில அரசுகள் உட்பட வேறு யாருக்கும் உரிமையில்லை. இந்த நான்கு மாநிலங்கள் மட்டுமல்லாமல் வேறு எந்த மாநிலமும் பத்மாவத் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு மாநில அரசுகள் இதை கையாள வேண்டும்” என்றும் கூறினார்.

இந்நிலையில் ராணி பத்மினியின் வாழ்க்கையை இழிவுபடுத்தும் விதமாகத் திரைப்படம் உருவாக்கியுள்ளதாக கர்னி சேனா அமைப்பு சார்பாகச் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகளும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி, படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என சீராய்வு மனுவை தாக்கல் செய்தன.

அதில் “ஒளிப்பதிவு சட்டத்தின் கீழ் ஒரு மாநிலத்தில் திரையிடப்படும் படங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என எண்ணினால் அந்தப் படத்தைத் தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த மனுக்களை நிராகரித்து, “சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மாநில அரசுகளின் கடமை. தணிக்கை செய்யப்பட்ட படத்தைத் திரையிடுவதைத் தடுக்க முடியாது” எனக் கூறியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 23 ஜன 2018