மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

அதிகரிக்கும் தகவல் தொழில்நுட்பச் செலவுகள்!

அதிகரிக்கும் தகவல் தொழில்நுட்பச் செலவுகள்!

சர்வதேச அளவிலான தகவல் தொழில்நுட்பத் துறைக்கான செலவுகள் 2018ஆம் ஆண்டில் 3.7 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் என்று கார்ட்னர் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் ஆராய்ச்சித் துணைத் தலைவர் ஜான் டேவிட் லவ்லாக் கூறுகையில், “2017ஆம் ஆண்டில் சர்வதேச அளவிலான தகவல் தொழில்நுட்பத் துறையின் செலவுகள் அதிகரித்துள்ளது. மேலும், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு இத்துறையின் செலவுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதகமான சூழல் நிலவுவதால் இத்துறையின் செலவுகளும் அதிகரித்து வருகிறது. செலவினங்கள் அதிகரிக்க வருவாயும் அதிகரிக்கும். டிஜிட்டல் தொழில் திட்டங்கள், இணையப் பயன்பாடுகள், இயந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளிலேயே செலவினங்கள் அதிகரித்து வருகின்றன” என்றார்.

கார்ட்னர் நிறுவனம் தகவல் தொழில்நுட்பத் துறையில் செய்யப்படும் செலவுகள் குறித்து ஐந்து வகையாகப் பிரித்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. நிறுவன மென்பொருள், தரவு மைய அமைப்புகள், உபகரணங்கள், தகவல் தொழில்நுட்பச் சேவைகள் மற்றும் தொடர்பியல் சேவைகள் ஆகிய ஐந்து துறைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் வலுவான வளர்ச்சி காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 2018ஆம் ஆண்டில் இத்துறையின் வளர்ச்சி 9.8 சதவிகிதமாக இருக்குமென்றும், 2019ஆம் ஆண்டில் 8.4 சதவிகித வளர்ச்சி கண்டு இத்துறையின் செலவுகள் 421 பில்லியன் டாலர் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

செவ்வாய் 23 ஜன 2018