மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் நீக்கம்: மார்ச் 20இல் விசாரணை!

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் நீக்கம்: மார்ச் 20இல் விசாரணை!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை, வரும் மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உயர் நீதிமன்றம்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏக்கள் 2015ஆம் ஆண்டு மார்ச் முதல் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் வரை நாடாளுமன்றச் செயலாளர்களாக இருந்தனர். இந்த விவகாரத்தில் ஆதாயம் பெறும் வகையில் இரட்டைப் பதவி வகித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், கடந்த வெள்ளியன்று (ஜனவரி 19) சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கம் செய்யுமாறு குடியரசுத் தலைவருக்குத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.

இதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென்று, ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை எடுத்துக்கொண்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில், கடந்த ஞாயிறு அன்று (ஜனவரி 21) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் தெரிவித்தார்.

ஏற்கனவே ஜைர்னைல் சிங் என்ற எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்ததால், மீதமுள்ள 20 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்ததாக அறிவிக்கப்பட்டனர். அதேவேளையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு, நேற்று (ஜனவரி 22) மாலை டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நாடாளுமன்றச் செயலாளர்களாக இருந்தபோது எந்த வகையிலும் லாபம் பெறவில்லை என்று தெரிவித்த ஆம் ஆத்மி தரப்பு, இதுபற்றி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பளிக்கவில்லை என்று தெரிவித்தது. அதே நேரத்தில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த விவரங்களை உற்றுநோக்க வேண்டுமென்று அவகாசம் கேட்டது. இதனையடுத்து இந்த மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், விரைவில் புதிய மனு தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தது.

இதனை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், மைய மனுவை அடிப்படையாகக்கொண்டு வரும் மார்ச் 20ஆம் தேதியன்று விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 23 ஜன 2018