மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

அறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா

அறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா

கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்க விரும்பும் நயன்தாரா, அறிவழகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோபி நயினார் இயக்கத்தில் நடித்து கடந்த ஆண்டு வெளியான ‘அறம்’ திரைப்படம் நயன்தாராவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. ஏற்கனவே மாயா, டோரா எனக் கதாநாயகியை மையமாகக்கொண்ட படங்களில் நடித்திருந்தாலும் அறம் படத்தின் வெற்றி அந்தப் பாதையை மேலும் தெளிவாக்கியது. ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் வந்துபோகும் நடிகையாக இல்லாமல் பொறுப்புணர்வு மிக்க வேடங்களை ஏற்று நடிக்க திட்டமிட்டுள்ளார்.

அறம் படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் நயன்தாராதான் அதைத் தயாரித்தார் எனத் திரைத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன் தனது படத்துக்குத் தயாரிப்பாளர் வேண்டும் என நயன்தாராவிடம் கூற, அவர் கதையைக் கேட்டுள்ளார். கதாநாயகியை மையமாகக்கொண்ட த்ரில்லர் பாணிக் கதை அவருக்குப் பிடித்துப்போக, தானே நடிப்பதாகக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அறிவழகன் டெக்கான் க்ரானிக்கிலுக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் முதலில் இந்தக் கதைக்கு மஞ்சு வாரியரை அணுகினோம்; தற்போது நயன்தாரா அந்த துணிச்சலான வேடத்தில் நடிக்கவுள்ளார்” என்று கூறியுள்ளார்.

அறிவழகனின் முந்தைய படங்களின் திரைக்கதை நயன்தாராவுக்கு மிகவும் பிடித்துள்ளதாலும் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது என்று சொல்லப்படுகிறது. முக்கியமான சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்கச் சில மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. தமன் இசையமைக்கவுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 23 ஜன 2018