மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

நீடிக்கும் சமத்துவமின்மை இடைவெளி!

நீடிக்கும் சமத்துவமின்மை இடைவெளி!

உலகின் பணக்கார ஒரு சதவிகித மக்களின் சொத்து மதிப்பு 2௦16-17ஆம் நிதியாண்டில் 82 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக ஆக்ஸ்ஃபோம் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச அமைப்பான ஆக்ஸ்ஃபோம் உலக வறுமை ஒழிப்பு தொடர்பாகச் செயலாற்றி வருகிறது. இந்த அமைப்பு திங்கட்கிழமை (ஜனவரி 22) வெளியிட்டுள்ள உலக சமத்துவமின்மை அறிக்கையில், ‘சர்வதேச அளவில் பெரும் பணக்கார ஒரு சதவிகிதத்தினரின் சொத்து மதிப்பு 2௦16-17ஆம் நிதியாண்டில் 82 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2௦16-17ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் இவர்களின் சொத்து மதிப்பு ரூ.8,482 லட்சம் கோடியிலிருந்து ரூ.8,968 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

2௦17ஆம் நிதியாண்டில் பணக்கார ஒரு சதவிகிதத்தினர் மட்டும் உலகின் மொத்த சொத்தில் 5௦ சதவிகிதத்துக்கும் அதிகமாகக் கொண்டிருந்தனர். அதேசமயம் 5௦ சதவிகித ஏழை மக்கள் வெறும் ௦.96 சதவிகித சொத்தினை மட்டுமே கொண்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நிதியாண்டில் கூடுதலாக 17 பில்லியனர்கள் இப்பட்டியலில் இணைந்துள்ளனர். இந்தியாவிலுள்ள ஒரு சதவிகித பணக்காரர்கள் இந்த நிதியாண்டில் 73% வருவாய் ஈட்டியுள்ளனர். இந்தியாவின் 5௦ சதவிகித (67 கோடி) ஏழை மக்கள் ஒரு சதவிகித வருவாய் மட்டுமே ஈட்டியுள்ளனர். இந்தியாவின் பத்து சதவிகித பணக்காரர்கள் 73 சதவிகித செல்வத்தைக் கொண்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கை பத்து நாடுகளில் உள்ள 70,000 தனிநபர்களிடம் நடத்தப்பட்டுள்ளது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி நீடிப்பதாக 84 சதவிகித மக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். சமத்துவமின்மைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென 73 சதவிகித மக்கள் விருப்பம் தெரித்துள்ளனர்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 23 ஜன 2018