மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

மார்ச் 28இல் பார் கவுன்சில் தேர்தல்!

மார்ச் 28இல் பார் கவுன்சில் தேர்தல்!

ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில், வரும் மார்ச் 28ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 1ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 2016ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. தற்போது, சிறப்பு உறுப்பினர்களால் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே, பார் கவுன்சில் தேர்தல் குறித்தான எதிர்பார்ப்பு வழக்கறிஞர்கள் மத்தியில் நிலவிவந்தது. ஆனாலும், தேர்தல் தேதியை அறிவிப்பதில் தாமதம் தொடர்ந்தது.

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் கறை படிந்திருப்பதாக, கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்தார் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன். ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு பார் கவுன்சில் தேர்தல் விரைவில் நடத்திட வேண்டுமென்று, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ராவுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், வரும் மார்ச் 28ஆம் தேதியன்று பார் கவுன்சில் தேர்தல் நடைபெறவுள்ளதாகத் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்கள், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். பிப்ரவரி 22ஆம் தேதி, வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் பார் கவுன்சில் நடைபெறவிருக்கிறது. இதை, நேற்று (ஜனவரி 22) தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சிறப்பு ஆணைய உறுப்பினர் சிங்காரவேலர் அறிவித்தார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

செவ்வாய் 23 ஜன 2018