மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

5 ரூபாய் குடுக்க வேண்டியதுக்கு 15 ரூபாய் குடுத்து டிக்கெட் எடுக்குறப்ப வயிறு எரியுதா?

ஓட்டுக்கு காச வாங்கிட்டு, தகுதியில்லாதவங்ககிட்ட நாட்ட குடுத்தப்ப இப்டித்தான் எங்களுக்கும் எரிஞ்சுச்சு!

அப்படின்னு ஒரு மெசேஜ் வந்துச்சு, ஆரம்பிச்சது நல்லா ஆரம்பிச்சியே நல்லபடியா முடிச்சியா... இப்படிக்குன்னு கீழ யாருன்னு போட வேண்டாமா?

பெட்ரோல் வெல ஜாஸ்தி... பைக்ல, கார்ல போக முடிலனு பொலம்பிட்டிருந்தாய்ங்க.

பஸ் டிக்கெட் ஏத்தின உடனே பைக்ல, கார்லயே போய்க்கறேன்றானுக!

என்னாத்த சொல்றது போங்க.

பஸ்ல போனா பயணக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துறாங்க.

பைக்ல போனா போலீஸ் தொல்லை. இன்சூரன்ஸுக்கு வருசா வருசம் ஆயிரம் ரூபாய் அழணும்.

கார்ல போனா வழிப்பறி கொள்ளையர்களைப்போல் 50 கி.மீக்கு ஒரு கட்டண வசூல் மையம்.

பெட்ரோல் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு.

இது பத்தாதுனு GST 18% - 28%

சம்பாதிக்கிற காசுல வேற income tax 30% வரை.

இதுல கார், பைக் வாங்குனா road tax, compulsory vehicle insurance.

இதையும் மீறி சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருந்தால் Property க்கு tax கட்டணும்.

ஒருபக்கம் பேங்குல காசு போட்டாலும் service கட்டணம். பணம் எடுத்தாலும் service கட்டணம்.

ATM கார்டுக்கு வருஷத்துக்கு usage கட்டணம்.

Balance குறைந்தால் கட்டணம்.

Message அனுப்ப கட்டணம்.

இப்படி எட்டு பக்கமும் பிச்சுப்புடுங்குற கூட்டத்துக்கு நடுவுல வாழுறோம்.

இத விடவா வேற எதாச்சும் திருடன் வந்து நம்ம கிட்ட இருக்கறத திருடிற முடியும்?

இப்படியெல்லாம் சிலர் யோசிச்சுக்கிட்டு இருக்கப்போ, வேலைக்காரன் படம் பார்த்துட்டு ஓர் ஆள் ஐடியா பண்ணி மெசேஜ் அனுப்பிருக்காரு. அதுலதான் லைட் எரியும் ஒரே இடத்துல, எல்லாரும் ஒற்றுமையா துண்டு போட்டு வருவாங்க, அந்த கான்செப்ட் பார்த்தும் உடனே மெசேஜ் டைப் பண்ணிட்டாங்க. என்னவாம்.. இதோ..

பேருந்து உயர்வை கண்டித்து அனைத்து கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு நிற ஆடை அணிந்து பேருந்து கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். திங்கள் அன்று யாரும் கல்லூரிக்குச் செல்ல வேண்டாம். கல்லூரி முன் நின்று அமைதி போராட்டம் செய்ய வேண்டும். நீ உண்மையான கல்லூரி மாணவனாக இருந்தால் இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க... plz.

இதனால் பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தர மக்களும் தான். இதனோடு பொது மக்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

இதை அதிகம் பகிரவும் (plz share it)

என்னய்யா இது காலம் காலமா உள்ள கொள்கைய மாத்துற... தமிழனா இருந்தா ஷேர் செய்யவும்ன்னுல்ல சொல்லணும்...

என்னவோ போ...

இன்னும் வளரணும் தம்பி...

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

செவ்வாய் 23 ஜன 2018