மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

ஐ.பி.எல் சுவாரஸ்யம் ஆரம்பம்!

ஐ.பி.எல் சுவாரஸ்யம் ஆரம்பம்!

ஐ.பி.எல் தொடரின் 11ஆவது சீசன் குறித்த தகவல்களை நேற்று (ஜனவரி 22) ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 10 வருடங்களாக நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்தப் புதிய சீசன் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மீண்டும் இந்த சீசனில் களம் காண்கின்றன. அதுமட்டுமின்றி அனைத்து அணிகளிலும் முன்பிருந்த வீரர்கள் பெரும்பாலும் இல்லாமல் புதிய வீரர்கள் இடம்பெற போகிறார்கள் என்பதால் ரசிகர்கள் இந்தத் தொடரைக் காண ஆவலுடன் உள்ளனர்.

ஐ.பி.எல் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளதை இதற்கு முன்னரே அறிவித்திருந்த நிலையில் அதில் மொத்தம் 1,122 வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என்ற விவரத்தை நேற்று ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வருகிற ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்றும், முதல் மற்றும் கடைசி போட்டி மும்பையில் நடைபெறும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இந்த முறை ஐ.பி.எல் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்ப உள்ளதால் அதன் புதிய வேண்டுகோளை ஐ.பி.எல் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் போட்டிகள் முடிய நீண்ட நேரமாவதால் அதை 7 மணிக்கு தொடங்க வேண்டுமென்றும், மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியை 5.30 மணிக்கு மாற்றம் செய்ய கோரியும் வேண்டுகோள் வைத்தது. இரவு நேரப் போட்டிகள் நீண்ட நேரம் ஆவதால் அதை 7 மணிக்கு தொடங்க ஒப்புதல் வழங்கிய ஐ.பி.எல் நிர்வாகம், மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியை 5.30 மணிக்கு மாற்றுவதால் இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் என எடுத்துக் கூறியுள்ளது. இருப்பினும் இருவேறு சேனல்களில் இரண்டு போட்டிகளையும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பலாம் என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கூறியதை அடுத்து இதற்கு ஐ.பி.எல் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஏப்ரல் 6ஆம் தேதி ஐ.பி.எல் 2018 சீசனின் தொடக்கவிழா மும்பையில் கோலாகலமாகத் தொடங்கும் எனவும் ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 23 ஜன 2018