மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா: பால் பணியாரம்!

கிச்சன் கீர்த்தனா: பால் பணியாரம்!

செட்டிநாடு ஸ்பெஷல் பால் பணியாரம் பெரும்பாலான விருந்துகளிலும் சிறப்பாகப் பரிமாறப்படும் ஒரு முக்கிய இனிப்பு வகை. அழகான வெள்ளை நிறத்தில், தேங்காய்ப்பால் மற்றும் பசும்பாலில் அளவான இனிப்பு கலந்து ஏலக்காய் அல்லது குங்குமப்பூ வாசனையோடு, பாலில் ஊறிய பூப்போன்று சுவையான பால் பணியாரத்தின் சுவையை வாழ்வில் ஒரு முறையேனும் சுவைத்திட வேண்டும்.

செய்முறை:

பச்சரிசி - 1 கோப்பை

உளுந்து – 1 கோப்பை

உப்பு - அரை தேக்கரண்டி

தேங்காய்ப் பால் - ஒரு மூடி

பால் - 2 கோப்பை

பசும்பால் காய்ச்சியது – 2 கோப்பை

சீனி - 4 கோப்பை அல்லது தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம்:

1. பச்சரிசி, உளுந்து இரண்டையும் 2 மணி நேரம் நன்கு கழுவி ஊறவைக்கவும்.

2. நன்கு ஊறிய பின்னர் கிரைண்டரில் விழுதாக அரைக்கவும், முழு உளுந்தோ, அரிசியோ இல்லாமல் கவனமாக அரைக்கவும்.

3. மாவு அரைக்கும்போது தண்ணீர் அதிகம் ஊற்றாமல் சிறிது சிறிதாக தெளித்து வடை மாவு ஆட்டுவது போல் கெட்டியாக ஆட்டவும். பந்து போல் அரைத்து உப்பு சேர்த்து கலக்கவும்.

4. பசும்பாலைக் காய்ச்சி, தேங்காய் பால் எடுத்து இரண்டையும் ஒன்றாகச் சீனி சேர்த்து கலந்து தயாராக வைக்கவும்.

5. வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அரைத்த மாவை கையில் எடுத்து விரல்களினால் சிறு சிறு (இலந்தைப்பழம் அளவுக்கு) உருண்டைகளாகக் காய்ந்த எண்ணெயில் மெதுவாக போடவும்.

6. இருபுறமும் இளம் மஞ்சள் நிறம் வரும் வரை வேக விடவும். கவனம் இளந்தீயில் பொரித்தெடுப்பது உத்தமம்.

7. பாத்திரத்தில் 2 லிட்டர் அளவுக்குத் தண்ணீர் கொதிக்க வைத்து தயாராக வைக்கவும்.

8. பொரித்த பணியாரத்தை சுடுநீரில் 3 நிமிடங்கள் வரை போட்டு எடுக்கவும்.

9. நீரை நன்கு வடித்து பிறகு பணியாரத்தைக் கலந்த பாலில் சேர்த்து ஊற வைக்கவும்.

10. குங்குமப்பூ அல்லது ஏலக்காய் பொடி சேர்த்துப் பரிமாறவும்.

கீர்த்தனா சிந்தனைகள்:

பேருந்து நஷ்டத்தை மட்டும் மக்களிடமே திருப்பி விடும் அரசுக்கு, டாஸ்மாக் லாபத்தை திருப்பி தர புத்தியில்லையானு கேட்கிறான் ஒரு பாமரன்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 23 ஜன 2018