மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

ஜனவரி 10ஆம் தேதி தொடங்கிய 41ஆவது சென்னைப் புத்தகக் காட்சி நேற்றோடு (ஜனவரி 22) நிறைவுபெற்றது. கடைசி நாள் என்பதால் புத்தகப் பிரியர்களால் அனைத்து அரங்குகளும் நிரம்பி வழிந்தன. அதேபோல் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான நமது மின்னம்பலம் அரங்கிலும் (அரங்கு எண் 379) வாசகர்களின் எண்ணிக்கை அதிகப்படியாக இருந்தன.

வாசகர்களை ஊக்குவிக்கும்விதமாக நடத்தப்படும் ஸ்மார்ட்போன் பரிசு திட்டத்தில் பங்குபெற வாசகர்கள் மின்னம்பலம் அரங்குக்கு வருகை தருவதோடு நமது மின்னம்பலம் பத்திரிகை சம்பந்தமான பல்வேறு விஷயங்களையும் பதிப்பகப் புத்தகங்களையும் வாங்கிச் சென்றனர்.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்பட்டு வந்தன. அதேபோல் கடைசி நாளான நேற்று வாசகர் பரிசு மட்டுமல்லாது, புத்தகக் காட்சியில் இடம்பெற்ற பதிப்பகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் ஒருவருக்கான சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது. இந்தப் பரிசும் குலுக்கல் முறையிலே தேர்வு செய்யப்பட்டது.

இதில் வாசகர் பரிசுக்காக நடைபெற்ற குலுக்கலில் சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்த எஸ்.அருண் MI 5A மாடல் ஸ்மார்ட்போனைத் தட்டிச்சென்றார். இவர் ஸ்ரீராம் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் இ.சி.இ. மூன்றாமாண்டு படித்து வருகிறார். இந்தப் பரிசை கவிதா பப்ளிகேஷன்ஸ் நிறுவனர் சேது சொக்கலிங்கம் அவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

பதிப்பக ஊழியர்களுக்கான சிறப்பு பரிசினை தி.நகர் ஈஸ்வர் புக் சென்டரில் பணிபுரியும் எஸ்.பவானி MI 5A மாடல் ஸ்மார்ட்போனைத் தட்டிச்சென்றார். இந்தப் பரிசை பபாசி நிறுவனச் செயலாளர் வெங்கடாச்சலம் முன்னிலையில் பபாசி தலைவர் எஸ்.வைரவன் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார். பபாசி நிர்வாகக் குழுவினர் பலரும் உடன் இருந்தனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 23 ஜன 2018