மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

விவசாய வருவாயை இரட்டிப்பாக்கும் வழி!

விவசாய வருவாயை இரட்டிப்பாக்கும் வழி!

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க, குடும்ப வருவாயை உயர்த்த வேண்டும் என ஹிதேஷ் பட் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மென்ட் ஆனந்தின் (ஐ.ஆர்.எம்.ஏ.) புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள ஹிதேஷ் பட் பிசினஸ் லைன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்திய கிராமப்புற விவசாயம் ஒரு நெருக்கடியான சூழலில் உள்ளது. விலை வீழ்ச்சி பெரும் சவாலாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் 67 சதவிகித விவசாயிகள் ஓர் ஏக்கர் நிலம் மட்டுமே வைத்துள்ளனர். சாகுபடிக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. ஆனால், இவர்களின் வருவாயோ, விளைபொருள்களின் மதிப்போ உயரவே இல்லை. முந்தைய பருவத்தில் பல்வேறு விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி) விட சந்தை விலை குறைந்தது.

உற்பத்தி செய்யப்பட்ட மொத்த உற்பத்திப் பொருள்களையும் அரசால் கொள்முதல் செய்ய இயலாது. ஆனால், மின்னணு வேளாண் சந்தை (eNAM) விவசாயிகளின் வர்த்தகத்துக்கு நல்ல வாய்ப்பாக அமையும். மின்னணு வேளாண் சந்தையின் மூலமாகப் பொருள்களை விற்பனை செய்வதன் மூலமாக இடைத்தரகு முறையை ஒழிக்கலாம். கால்நடைகள் வளர்ப்பு, கோழிப்பண்ணை, கோழிக்குஞ்சு பொறிப்பகம், பன்றி வளர்ப்பு மற்றும் பழத் தோட்டம் போன்ற பணிகளை மேற்கொண்டு கூடுதல் வருவாய் ஈட்டலாம்” என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 23 ஜன 2018